வாசிப்பும் … சுவாசிப்பும்….

இலக்கியம் என்பது என்னை பொறுத்தவரை நம்மை தூய்மை படுத்தும் ஒரு புனித நீர் .ஒரு படிக்காத நாள் என்பது நாம் சவமாக இருந்த நாள் .நான் படித்து வியந்த புத்தகங்களை பற்றி பகிர்ந்து கொள்ள இந்த வலைப்பதிவை தொடங்கி உள்ளேன்.

நான் வியந்து படித்த எழுத்தாளர்கள் சிலரை பற்றி கூறியாக வேண்டும். சமீபத்தில் நான் படித்த புத்தகம் அறம், அதன் ஆசிரியர் ஜெயமோகன். நூறு நாற்காலிகள் என்ற கதை என்னை உலுக்கியது .ஒரு எழுத்தாளரால் இப்படி எழுத முடியுமா என்று எண்ணி எண்ணி வியந்த நூல். அவர் எழுதிய இன்னொரு சிறுகதை கூடு அது ஒரு பயணத்திற்கு நம்மை அழைத்து செல்லும் .அதில் அவருடைய மிக நுட்பமான எழுத்து திறமையை சொல்ல வார்த்தை இல்லை .

என்னுடைய இன்னொரு மானசீக எழுத்தாளர் திரு. எஸ். இராமகிருஷ்ணன் அவர்கள் அவர் எழுதிய பல சிறுகதைகள் படித்திருக்கிறேன் அதில் எனக்கு பிடித்த கதைகளில் சில போயர்பாக் கண்டறிந்த மலைக்கோவில், சிற்றிதழ், அஸ்தபோவில் இருவர். அவர் எழுதிய நூல்களில் எனக்கு பிடித்த நூல்கள் இடக்கை ,சஞ்சாரம் .

நான்முதன்முதலில் படிக்க ஆரம்பித்த தமிழ் நூல் நந்திபுரத்து நாயகி அதன் பின் பொன்னியின் செல்வன், அலை ஓசை, பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம் என்று கல்கி அவர்களின் எழுத்திற்கு அடிமை ஆனேன் .

எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களின் உடையார் மற்றும் கங்கை கொண்ட சோழன் படித்த தருணங்கள் வாழ்வின் மறக்க முடியாத தருணங்கள்.

எழுத்தாளர் இமயம் அவர்களின் சிறுகதைகளை படிக்க ஆரம்பித்தேன். அதில் பெத்தவன் என்ற கதை மிகச் சிறந்த கதை

அடுத்து அ .முத்துலிங்கம் அவர்களின் கதைகள் புளிக்க வைத்த அப்பம்,நிலம் எனும் நல்லாள் .இந்த இரண்டு கதையும் என்னால் மறக்க முடியாத கதைகள் .

அம்பை அவர்களின் கதைகள் ஒவ்வொன்றும் அற்புதமானவை .இன்னும் எழுத்தாளர்கள் நிறைய இருக்கின்றனர் சமீபத்தில் எழுத்தாளர் ஷோபா சக்தி மற்றும் அகர முதல்வன் அவர்களின் கதை படித்தேன். எழுத்தாளர் வேலமூர்த்தியின் குற்றப்பரம்பரை எனக்கு பிடித்திருந்தது.

இப்படி ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக எதையேனும் படித்து புத்தகத்தோடு பயணம் செய்வதையே என் ஆசை அந்த பயண அனுபவங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வது அலாதியான இன்பம் .

மது – மே, 16, 2020.

ReplyForward

3 thoughts on “வாசிப்பும் … சுவாசிப்பும்….”

  1. அருமை மது. தொடர்ந்து உங்கள் புத்தக அனுபவங்களை எழுதுங்கள்.

  2. வாசிப்பின் மகத்துவம் நம் வாழ்விலும், எழுத்திலும் வெளிப்படும். மெத்த படித்ததனால் மட்டுமே நாம் எழுதுவதை நாமே சீர் தூக்கி பார்த்து, எது சரி, எது தவறு, எது கருவை வெளிப்படுத்துகிறது, எது பாதையை விட்டு விலகிப்போகிறது என்று நமக்கு பிறர் சொல்லும் முன் சொல்லிவிடும்.

    தொடர்ந்து படியுங்கள். தொடர்ந்து எழுதவும் செய்யுங்கள். தொடரும் காலத்திற்கு படிப்பவர்களும் தேவை, படிப்பவர்களும் தேவை.

Comments are closed.